business

img

இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் மெகா கூட்டணியுடன் அமேசான்.... 

மும்பை 

கடந்த 2016-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (UPI - unified  payments  interface)  என்ற பெயரில் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சந்தை உருவாக்கபட்டது. 

இந்த பணமில்லா பரிவர்த்தனை சந்தை தற்போது இந்திய மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியாவுக்கு போட்டியாக அமேசான் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ள நிலையில், அமேசான் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவையுடன் கூட்டணி அமைத்து புதிய அமைப்பை உருவாக்க திட்டம் வகுத்துள்ளதாகவும், இந்த அமைப்புக்கு (NUE  - new  umberlla entity) பெயர் வைக்கப்படுவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. 

அமேசான்  மட்டுமின்றி அம்பானியின் ஜியோ மற்றும் டாடா நிறுவனங்களும்  இத்துறையில் இறங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

;